நிலைய செய்திகள்
 
English (UK)SinhalaSriLanka

அறிவகங்களுக்குத் தேசிய அங்கீகாரம்

இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) சமீபத்தில் அறிவக அங்கீகார சுவர்ண விருது விழா 2013வை மவுண்ட் லவீனியா மா விடுதியில் சமீபத்தில் (26) நடத்தியது. இதன் நோக்கம் அறிவகங்கள் என்னும் ஞான மையங்களின் மூலம் அறிவக உரிமையாளர்கள் மற்றும் செயல்படுத்துபவர்கள் நாட்டுக்கு வழங்கும் பணிக்கு உரிய கணிப்பைக் கொடுப்பதாகும்.

தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடி அவர்கள் தலைமை அதிதியாகக் கலந்துகொண்ட இந் நிகழ்வில் விருது பெறுபவதற்கு அருகதையானவர்கள் நாடுபூராக நிறுவப்பட்டுள்ள அறிவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் செயல்படுத்துபவர்கள் ஆவர்.


 ஐம்பதுக்கும் அதிகமான எண்ணிக்கையில் பெற்றுக்கொள்ளப்பட இவ் விருதுகள் ‘இலங்கையில் மிகச் சிறந்த அறிவக’, ‘மாகாணங்களுள் மிகச் சிறந்த அறிவக’, ‘மாவட்டங்களில் மிகச் சிறந்த அறிவக’ என்ற அடிப்படையிலும் வழங்கப்பட்டன. இவற்றைத் தவிர சிறப்பு விருதுகளுள் பேராசிரியர் வீ.கே. சுமரநாயக்கா ஞாபகார்த்த விருது மற்றும் அறிவக சமூக விருதும் அடங்கின.

இதன்படி ‘இலங்கையில் மிகச் சிறந்த அறிவக’, அல்லது அறிவக அங்கீகார சுவர்ண விருதினை இரத்தினபுரி மாவட்டத்தின் பலங்கொடை அறிவகம் பெற்றுக்கொண்டது. அத்துடன் பேராசிரியர் வீ. கே. சுமரநாயக்கா ஞாபகார்த்த விருது ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சூரியவெவ அறிவகத்துக்குக் கிடைத்தது. இவற்றை முறையே அறிவக உரிமையாளர்கள் உதேஷ் மலிகரத்ன மற்றும் தீபிகா பிரியதர்சனி பெற்றுக்கொண்டனர். மாகாண ரீதியில் ஒன்பது விருதுகளும் மாவட்ட ரீதியில் 20 விருதுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன.

இவற்றைத் தவிர 19 சிறப்பு விருதுகளும் ஒரு அறிவக சமூக விருதும் வழங்கப்பட்டன. அறிவக சமூக விருதினை பெற்றுக்கொண்டார் பலங்கொடை அறிவகப்பகுதியைச் சேர்ந்த கமள் சதுரங்க கமகே என்பவர் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய அறிவகச் செயல்திட்டம் அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஒரு எண்ணக்கருவென்றார். மக்களுக்கு, சிறப்பாகச் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் நன்மைகள் மிகச் சிறந்த விதத்தில் கிடைக்கச் செய்வது சனாதிபதியவர்களின் மனதில் எப்போதும் இருந்து வந்த அவா ஒன்று என்று அமைச்சர் கூறினார். இவ் அவாவை நிறைவேற்றுவதற்கான பிரதான மார்க்கங்களுள் அறிவகம் முக்கியமானதென அமைச்சர் மேலும் கூறினார். அறிவகங்களை வினைத்திறனான விதத்தில் நடத்துவது இலகுவான பணியல்ல. பல நாடுகளில் இவ்வகையான மையங்கள் தோல்வியை எய்தியுள்ளன. 

இவ்வகையான பின்னணியில் இலங்கையில் அறிவகங்கள் சித்திவாய்ந்தவிதத்தில் நடத்தப்பட்டுள்ளமைக்கு காரணிகள் ICTA வும் அறிவகங்கள் தொடர்பான உரிமையாளர்கள் மற்றும் செயலாற்றுபவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியுமென அமைச்சர் எடுத்துக்காட்டினார்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ICTA வின் பிரதான நிறைவேற்றதிகாரி ரெஷான் தேவபுர அறிவகச் செயற்றிட்டம் இற்றைக்கு எட்டு வருடங்களுக்கு முன்னர் சனாதிபதி அவர்களால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதென்று கூறினார். அறிவகங்கள் இன்று இலங்கையிலும் பிறநாடுகளிலும் பாராட்டப்படுவதற்கு சனாதிபதியவர்கள் இ-இலங்கை மேலெடுப்பிற்குக் கீழ் வழங்கிய வழிகாட்டலும் அமைச்சர் ரஞ்சிற் சியம்பலாபிடிய அவர்கள் வழங்கிய நடைமுறை அடிப்படையிலான அறிவுரையும் காரணிகள். ஆனால் அவற்றின் உரிமையாளர்களும் நடத்துனர்ளும் தங்கள் ஒத்துழைப்பை வழங்காமலிருந்தால் இந்த உயர்நிலைக்கு நம் அறிவகங்கள் வந்திருக்க முடியாது. தவறுகள் இருக்காமலிலை எனக் கூறிய நிறைவேற்றதிகாரி அறிவகங்களுக்காக வழங்கப்படும் நிதி மற்றும் ஏனைய வளங்களை மக்களுக்கு மிகப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இவ்விழாவின்போது கலாநிதி பஷீர் அஹமட் சத்ராச் அவர்களால் எழுதப்பட்ட  “அறிவகம் எனும் இலங்கை தொலைமையத்தின் அனுபவம்” என்ற நூல் (முதல் மொழியாக) ஆங்கிலத்திலும், (மொழிபெயர்ப்பாக) சிங்களத்திலும் தமிழிலும் வெளியிடல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இவ்விழாவின்போது விருது வழங்கலில் ICTA வின் தலைவர், சனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் பேராதலை பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பீ. டப்ளிவ். ஆபாசிங்ஹ அவர்களும் பங்குபற்றினார்.

மேலதிக விபரங்களுக்கு www.nenasalapranama.lk என்னும் இணையதளத்தை நாடவும்.

புதிய கருத்தை சேர்


அறிவித்தல்கள் :

User Login

அறிவகத் தேடல்