இலங்கை அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இ-ஸ்ரீ லங்கா ஆரம்பிக்கப்பட்டபோது 'அனைத்து பிரசைகளுக்கும் பல்வகைமையுடனான வரையறையற்ற தகவல் தோற்றுவாய்களுக்கும் தொடர்பாடல் வழிகளுக்கும் பிரவேசிப்பதற்கு வசதியளிப்பது' இதன் நோக்கமாக இருந்தது.
என்பவற்றுக்காக தவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆற்றக்கூடிய பணிகளின் மாபெரும் ஆக்கத்திறன் இனம் காணப்பட்டு இக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இ - ஸ்ரீ லங்கா ஆரம்பிக்கப்பட்டதன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு கருத்திட்டம் அறிவக கருத்திட்டமாகும். 'விஸ்வ ஞான நிலைய கருத்திட்டம் (அறிவகம்)' என முன்னர் குறிப்பிடப்பட்ட இந் நிகழ்ச்சித்திட்டம், இ.த.தொ.தொ.மு. நிலையத்தினால் "அறிவகம்" என்ற பெயரின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. அத்துடன் கிராமிய மற்றும் நகர சார்புடைய மக்கள் மத்தியில் த.தொ.தொ.நுட்பத்தை விரிவாக்கும் பொருட்டு இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் பல மாதிரிகளில் டெலிசென்ரர்கள் அல்லது அறிவு நிலையங்கள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.
அறிவகங்களை ஸ்தாபித்தல் மற்றும் த.தொ. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட சேவைகளை வழங்குதல் என்பவற்றின் மூலம் நாட்டின் அனைத்து கிராமிய பிரதேசங்களிலும் தகவல் தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும்பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றுவதை இக் கருத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிராமிய பிரதேசங்களில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழல்நுட்பத்தின் விரிவாக்கமும் பயன்பாடும் வரையறுக்கப்பட்ட நிலையில் இருப்பதனால், அப் பிரதேசங்களுக்காக த.தொ.தொழில்நுட்ப பிரவேசத்தை வழங்குவதற்குள்ள மிகவும் பயனுறுதிமிக்க வினைத்திறன்மிக்க முறை அறிவகங்களை ஸ்தாபிப்பதாகும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அறிவகத்தின் பிரதான நோக்கம்:
அறிவகத்தின் மூலம் வழங்கப்படவிருக்கும் அனைத்து சேவைகளும் ஒத்துழைப்பும் நீண்ட காலம் நிலைபேறாக இருப்பதற்கு / சான்றுப்படுத்துவதற்கு சாத்தியமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பின்வரும் மாதிரியைப் பயன்படுத்தி நாடு முழுவதிலும் அறிவக வலைப்பின்னலை அமைக்கும்போது முதலில் அமைத்த அறிவகங்களை மதிப்பீடு செய்வதன்மூலம் கற்ற பாடங்கள் பயன்படுத்தப்படும்.
சிக்கலான தன்மைகள் மற்றும் வழங்கப்படுகின்ற சேவைகள் என்பவற்றின் பிரகாரம் த.தொ.தொ.நுட்ப முகவர் நிலையம் வித்தியாசமான மூன்று விதங்களில் அறிவகத்தை அல்லது அறிவு நிலையத்தை அமைக்கும். அவையாவன,
"உலக அறிவு கிராமத்திற்கு" என்ற தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கம் இணையத்தளம், மின்னஞ்சல், தொலைபேசி, தொலைநகல், போட்டோ பிரதிகள், கணனி பயிற்சி வகுப்புகள் மற்றும் ஏனைய த.தொ.சேவைகளுக்குள் பிரவேசிப்பதற்கான வசதிகளைச் செய்துகொடுத்தல் என்பவற்றுடன் மேற்படி சேவைகளை நீண்ட கால மற்றும் நிலைபேறான விதத்தில் வழங்குவதை நோக்கமாகக்கொண்டு வறுமையைக் குறைத்தல், சமூக பொருளாதார அபிவிருத்தியையும் சமாதானத்தையும் கட்டியெழுப்புகின்றபோது கிராமிய மக்களுக்கு உந்துசக்தியை வழங்கும்பொருட்டு பிராந்திய, தேசிய மற்றும் உலக தகவல் தோற்றுவாய்களின் மையமாக செயற்படுவதாகும். இவ்வறிக்கையின் மூன்றாவது பகுதியிலிருந்து (கட்டம் 1) முன்னோக்கி இடங்களையும் உரித்தாளர்களையும் தெரிவுசெய்யும் முழு செயற்பாட்டை விளக்குகிறது. முதற் கட்டத்தின்போது, 2005ஆம் ஆண்டு முடிவடைகின்றபோது, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் எவ்வித பிரவேசமும் இல்லாத அல்லது ஒரளவு பிரவேசம் மாத்திரம் உள்ள தெற்கு மற்றும் வடமேல் மாகாண கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 100 நிலையங்கள் அமைக்கப்படும். 2007ஆம் ஆண்டளவில் ஏனைய பிரதேசங்களிலும் இன்னும் 100 நிலையங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
இ - நூல்நிலையங்கள் கிராமிய அறிவு நிலையங்களிலேயே மிகச் சிறிய தன்மையைக் கொண்டிருந்தாலும் மாதிரியின் பிரகாரம் செயலாற்றுகின்ற சேவைகள் பல இலவசமாக வழங்கப்படுகின்றன. அத்துடன் நிலையத்தின் நிலைபேறான தன்மையைப் பேணுவதற்காக பணம் அறவிடுகின்ற சில சேவைகளும் நடத்தப்படுகின்றன. தொலைபேசி மற்றும் தேசிய, சர்வதேச மற்றும் பிராந்திய தகவல்களை அணுகும்பொருட்டு அதிவேக இணையத்தள வசதிகளுடனான கணனிகள் இந் நிலையத்தில் இருக்கின்றன. இணையத்தளத்தோடு இணையாமல் பயன்படுத்துவதற்காக சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் கணனி அடிப்படையிலான பயிற்சிகள் நடைபெறுகின்றன. அத்துடன் அனைத்து வயது அடிப்படையிலான மாணவர்களின் பயன்பாட்டுக்காக புத்தகங்கள் மற்றும் பருவ வெளியீடுகளுடனான இ - நூலகம் ஒன்று அமைக்கப்படும். கிராமங்களுக்கிடையில், குறிப்பாக மதஸ்தலங்கள், பொது நூலகங்கள், சனசமூக நிலையங்கள் என்பவற்றில் ஸ்தாபிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அடுத்த 2-3 வருடங்களில் இந்த அறிவக இ-நூலகங்கங்கள் 800 திறக்கப்படும்.
காணொளி(வீடியோ) மாநாட்டு அறை, பன்மொழி கணனி ஆய்வுகூடம், பின்னணி அறை போன்ற அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட தொலைக் கல்வி மற்றம் இ-கற்கை சேவைகள் தொலைக் கல்வி மற்றும் இ - கற்கை நிலையத்தில் உண்டு. உலக அபிவிருத்தி கற்கை வலைப்பின்னல் உள்ளூர் ரீதியாக தற்பொழுது இருக்கின்ற இ-கற்கை வலைப்பின்னலுடன் இணைந்து இடை செயற்பாட்டு பல் அலை வலைப்பின்னலொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக விரிவான பரப்பெல்லையில் பெரும் எண்ணிக்கையிலான பரிசீலிப்பவர்களுக்கு புதிய தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கு, கற்கை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் தொலைக் கல்வி மற்றும் இ-கற்கை நிலையத்தின் முழுமையான நோக்கமாகும். கொழும்புக்கு வெளியே பிரதான நகர பிரதேசங்களில் விரிவான பரப்பெல்லையில் மக்கள் தொகையின் திறன்களின் அளவை உயர்த்துவதை தொலைக் கல்வி மற்றும் இ-கற்கை நிலையம் நோக்கமாக்க் கொண்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக் கழகம், தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் ஒலுவில் பீடம் உள்ளிட்ட தொலைக் கல்வி மற்றும் இ-கற்கை நிலையங்கள் நான்கை (4) நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டமொன்றில் த.தொ.தொழில்நுட்ப முகவர் நிலையம் தற்பொழுது ஈடுபட்டுள்ளது.
சுனாமி அனர்த்தத்தினால் இடம்பெயந்து தங்கியிருக்கின்ற நலன்புரி முகாம்களில் சிறிய கணனி கூடங்களையும் அறிவகத்தையும் ஸ்தாபிப்பதன்மூலம் அவ் அனர்த்தத்தினால் துன்பங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்கு த.தொ.தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் வேலைத்திட்டமொன்று விசேட கருத்திட்டமாக த.தொ.தொழில்நுட்ப முகவர் நிலையம் நடைமுறைப்படுத்தும். கல்வி மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பான அத்தியாவசிய தகவல்களை சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் இந்நிகழ்ச்சித்திட்டம் வழங்குகின்றது. அத்துடன் குடியிருப்பாளர்களின் தகவல்கள் தொடர்பான தரவுகள் தொகுப்பொன்று உருவாக்கப்படும். இவ்வணைத்து சேவைகளும் முகாம்களில் இருக்கின்றவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
"சுனாமியின் குரல்" என்ற இத்தரவுகள் முறைமையில் முகாமில் குடியிருப்பவர்கள் அவர்களின் வாழ்வாதாரம், அவர்கள் இழந்தவைகள் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை மீள ஆரம்பிப்பதற்கு அவர்களுக்குத் தேவையானவைகள் தொடர்பான தகவலகள் என்பவற்றுடன் விசேட நோய்கள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான மருத்துவ தகவல்கள் அதில் உள்ளடக்கப்படும். நிவாரண. புனர்வாழ்வு, மீள் கட்டமைப்பு கட்டத்தின்போது இந்த தரவு முறைமை அரசாங்கத்திற்கு பெரிதும் பயனுள்ளதாக அமைகின்ற அதேவேளையில் இந்த முகாம்களுக்கு உதவிகளை வழங்க எதிர்பார்க்கின்ற நன்கொடை வழங்கும் நிறுவனங்களுக்கும் நபர்களுக்கும் அது பயனள்ளதாக அமையும். இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான தகவல்களை தற்பொழுது சேகரிக்கின்ற இது தொடர்பாக அக்கறை காட்டுகின்ற தரப்பினருக்கு தனி பிரவேச முனைiயாகவும் இத்தரவுகள் பயனுள்ளதாக அமைகின்ற அதேவேளையில் அதன் மூலம் பல்வகை தரவுகள் தொகுப்பு, மிகைப்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் எண்ணிக்கைகளை உருவாக்குதல் என்பவற்றையும் தடுக்கிறது.
சுனாமி முகாம்கள் அறிவகங்கள் ஊடாக த.தொ.தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்களையும் அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தவது எப்படி என்பதைப்பற்றியும் மக்கள் மத்தியில் அறிவை ஏற்படுத்துவதற்கு த.தொ.தொழில்நுட்ப முகவர் நிலையம் எதிர்பார்த்துள்ளது. மாற்றுத் தொழில்களைத் தேடுவதற்கான தேவை இருப்பவர்களுக்கு அதன் மூலம் தொழிற்பயிற்சி வழங்கப்படும். கருத்திட்டத்தை 6 மாதங்களுக்கு மாத்திரம் நடைமுறைப்படுத்த தீர்மானித்திருந்தாலும், முகாம் நடைபெறுகின்ற கால வரையறையை அடிப்படையாகக்கொண்டு அதைப் பூர்த்திசெய்வதற்கு நெகிழ்வுத் தன்மையுடன் நடவடிக்கை எடுக்கப்படும். முகாமில் உள்ள மனித வளங்களின் சரியான பயனைப் பெறுவது இந்த ஆரம்பத்தின் சிறப்பம்சமாகும். எமது கிராமிய மக்களின் இலைமறை காயாகவுள்ள திறமைகளையும் புலமையையும் சரியானமுறையில் பயன்படுத்தி நிலையங்களை நடத்துவதற்காக முகாமில் இருக்கின்ற இளைஞர்கள் யுவதிகள் இடையே ஆட்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். அவ் இளைஞர் யுவதிகளுக்கு வொலன்டியர் சிரம லங்கா நிறுவனத்தின் தொண்டர்களால் பயிற்சியளிக்கப்படும். இந் நிலையங்கள் வெற்றிகரமாக அமைந்தால், முன்னர் குறிப்பிட்ட அளவுகோல்களை பயன்படுத்தி அவற்றை நிரந்தரமான அறிவக இ-நூல் நிலையங்களாக்குவது தொடர்பாக த.தொ.தொ.முகவர் நிலையங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும். சுனாமி அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் உள்ள முகாம்களில் 20 நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இவ் அறிக்கையின் எஞ்சிய பகுதி அறிவக, கிராமிய அறிவு நிலையங்களில் (தொழில் முயற்சி அல்லது வாணிப மாதிரி) அனைத்து செயற்பாடுகள் மற்றும் செயற்படுத்தல்கள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.
முதற்கட்டத்தில் இரண்டு வலயங்கள் உள்ளடக்கப்பட்டன.(அ. தெற்கு ஆ. வடக்கு கிழக்கு)
தென் பிராந்திய வலயத்தில் உள்ளடக்கப்பட்ட மாவட்டங்கள்:
காலி | (4 பிரதேச செயலகங்கள் மாத்திரம் - 18 பி.செ.பி. இடையில்) |
மாத்தறை | (அனைத்து 16 பி. செ. பிரிவுகள்) |
அம்பாந்தோட்டை | (அனைத்து 11 பி. செ. பிரிவுகள்) |
மொணராகல | (பி. செ. பிரிவுகள் 11 இடையில் பி. செ. பிரிவுகள் 7 DSUs) |
இரத்தினபுரி | (பி. செ. பிரிவுகள் 17 இடையில் பி. செ. பிரிவுகள் 10 DSUs) |
பதுளை | (பி. செ. பிரிவுகள் 15 இடையில் பி. செ. பிரிவுகள் 5 DSUs) |
வடக்கு கிழக்கு வலயத்தில் உள்ளடக்கப்பட்ட மாவட்டங்கள்:
யாழ்ப்பாணம் | (அனைத்து பி. செ. பிரிவுகள்) |
கிளிநொச்சி | (அனைத்து பி. செ. பிரிவுகள்) |
வவுனியா | (அனைத்து பி. செ. பிரிவுகள்) |
முல்லைத்தீவு | (அனைத்து பி. செ. பிரிவுகள்) |
பொலனறுவை | (பி. செ. பிரிவுகள் 7 இடையில் பி. செ. பிரிவுகள். 3) |
அநுராதபுரம் | (பி. செ. பிரிவுகள் 20 இடையில் பி. செ. பிரிவுகள். 12) |
திருகோணமலை | (அனைத்து பி. செ. பிரிவுகள்.) |
முதலாவது கட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட பிரதேசங்கள் முதலாவது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
முதலாவது படம் - அறிவக கருத்திட்டம் - கட்டம்- தெற்கு பிராந்தியமும் வடக்கும் கிழக்கும்
அறிவக கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பிரதான நடவடிக்கைகளின் கீழ் பின்வருவன உள்ளடக்கப்பட்டுள்ளன:
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரகாரம் இலங்கையில் 319 பிரதேச செயலக பிரிவுகள் (பி.செ.பி) இருக்கின்றன. அத்துடன் அவைகள் 14,009 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாகவும் 38,259 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அறிவக கருத்திட்டத்தின் முதலாவது கருத்திட்டத்தின் நோக்கம் தெற்கு மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 100 அறிவகங்களை அமைப்பதாகும். ஆகவே அறிவக நிலையங்களை அமைப்பதற்கு உரிய இடங்களைத் தெரிவுசெய்வது அதன் முதற்கட்ட பணியாகும்.
இச்செயற்பாட்டின் நோக்கமானது:
மேற்குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன:
தரவுகளைச் சேகரித்தல், பரிசீலித்தல், பகுப்பாய்வு செய்தல் என்பவற்றின் பெறுபேறாக பொருத்தமானது எனக் கருதப்படுகின்ற 90 இடங்களைக் கொண்ட பட்டியலொன்று தயாரிக்கப்பட்டது. இவற்றில் 50 இடங்கள் தெற்கிலும் 40 இடங்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்தன. வடக்கு கிழக்கை உள்ளடக்கிய ஆய்வுக் குழுவுக்கு தமது ஆய்வை மேற்கொண்ட காலப்பகுதியில் இரண்டு மாவட்டங்களுக்கான (கிளிநொச்சி, முல்லைத்தீவு) தரவுகளை சேகரிக்க முடியாமற் போனதால் எந்தப் பிரதேசத்துக்கும் இடைச் சேர்க்கப்படாத 10 இடங்களை அப்பிரதேசங்களுக்காக ஒதுக்க தீர்மானிக்கப்பட்டது.
நாடு முழுவதிலும் பல தொடர்பாடல் நிலையங்களும் சைபர்கபேக்களும் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவைகள் நகரங்களிலும் நகரம் சார்ந்த பிரதேசங்களிலும் இருக்கின்றன.
இந்த ஆய்வின் நோக்கமானது:
சேகரித்த தரவுகளை அடிப்படையாகக்கொண்டு பல அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. இந்நிலையங்களைப் பயன்படுத்துகின்றவர்கள் யார் (வயது, ஆணா, பெண்ணா, வருமானநிலை உட்பட) அதிகமாகபட பயன்படுத்துகிற சேவைகளின் வகையும் எண்ணிக்கையும், நிலையங்களில் உள்ள இணையத்தள தொடர்புவகைகள் மற்றும் நிலையம் முகம்கொடுக்கின்ற தடைகளையும் சவால்களையும் பற்றிய தகவல்கள் இவ்வறிக்கைமூலம் வழங்கப்பட்டன.
கிராமிய பிரதேசங்களில் டெலி நிலையங்கள் இருப்பது பற்றிய முன்னனுபவம் இலங்கைக்கு இருக்காததனாலும் இக்கருத்திட்டங்கள் மூலம் டெலி நிலையங்களை ஸ்தாபிப்பதற்காக நிதி ஒத்துழைப்பை வழங்குவதற்கு கருத்திட்டம் கருதியதனாலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தக்கூடிய அறிவக மாதிரிகள் சிலவற்றை அறிந்துகொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கங்கள்:
வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தக்கூடிய மாதிரிகள் சிலவற்றைத் தயாரிக்கும்பொருட்டு தொடர்பாடல் நிலையங்கள் மற்றும் சைபர்கபே என்பவற்றின்மூலம் சேகரிக்கப்பட்ட நிதி மற்றும் ஏனைய தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.
சேகரித்துக்கொண்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு அறிவகங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள உபகரணங்களின் எண்ணிக்கையும் வகைகளும் உள்ளடங்கிய பட்டியலொன்று தயாரிக்கப்பட்டதோடு அவற்றில் செலவும் வருமானமும் உள்ளடங்கிய நிதி மாதிரியும் தயாரிக்கப்பட்டது.
வேறுபட்ட விதத்தில் வியாபார நடவடிக்கைகளை நடத்துவதற்கும் முகாமைப்படுத்துவதற்கும் இலங்கை மக்களுக்கு அனுபவம் உள்ளது. அத்துடன் அவர்களின் வியாபார ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்தல், அறிவகங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் அவற்றில் நீண்டகால நிலைபேறான தன்மைக்கு மாற்றங்களை ஏற்படுத்தும்பொருட்டு அறிவகங்களுக்கு முகாமைத்துவ, ஒழுங்கமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தேவைப்படலாம்.
இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கம்:
மதிப்பீட்டு செயற்பாட்டின் பெறுபேறாக, தனியார்துறை, சிவிலி அமைப்பு ஆகிய இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற எட்டு உதவி நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டன.
இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கம், தயாரிக்கப்பட வேண்டிய மொடியுல் வகையையும் எண்ணிக்கையையும் தீர்மானித்தல் மற்றும் பல தலைப்புகள் தொடர்பாக வசதிப்படுத்துனர்களுக்கும் அறிவக செயற்பாட்டாளர்களுக்கும் பயிற்சியளிப்பதற்குப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய மொடியுல் சிலவற்றைத் தயாரிப்பதாகும்.
பல்வேறு மொடியுல்களைத் தயாரிப்பதற்காக த.தொ.தொ.முகவர் நிலையம் சிறப்பறிஞர்கள் சிலரின் சேவைகளைப் பெற்றுக்கொண்டது.
இச் செயற்பாட்டின் பெறுபேறாக எட்டு மொடியுல்களும் எட்டு விசாரணை கைநூல்களும் தயாரிக்கப்பட்டன.
அறிவகங்களுக்கு வழங்குகின்ற தமது ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக உதவி நிறுவன வசதிப்படுத்துனர்கள் சிலரின் சேவையை வழங்கவேண்டியிருக்கின்றது. அத்துடன் அவர்களுக்குப் பயிற்சியளித்ததன் பின்னர் அறிவக செயற்பாட்டாளர்களுக்காக பயிற்றுனர்களாக சேவையாற்றுகின்ற அதேவேளையில் அறிவகங்களை அமைக்கின்ற பிரதேசங்களில் அறிவூட்டும் இயக்கமொன்று ஆரம்பிக்கப்படும்.
A total of 16 facilitators were identified and selected by the Support Institutions.
பயிற்சியின் பிரதான நோக்கமானது:
வசதிப்படுத்துனர்களால் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்கள் மற்றும் சுயமதிப்பீடு என்பவற்றின் பெறுபேறுகளின் பிரகாரம் தமது அறிவு தொடர்பாக வசதிப்படுத்துனர்களுக்கு நல்ல நம்பிக்கை இருந்தது.
அறிவகங்களின் உரிமையாளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் இருப்பதற்காக முன்மொழிவுகளை தயாரிக்க விரும்புகின்ற நபர்கள் அல்லது அமைப்புகள் தமது முன்மொழிவின் ஒரு பகுதியாக வியாபார திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டும். வியாபார திட்டத்தை தயாரிப்பதற்காக உரிய தகவல்களை வழங்குவதன் மூலம் முன்மொழிவு செய்கின்றவர்களுக்கு உதவும்பொருட்டு கேள்வி பகுப்பாய்வை / தேவை மதிப்பீட்டை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
கேள்வி பகுப்பாய்வின்/ தேவை மதிப்பீட்டின் பிரதான நோக்கமானது:
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலவரையறையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு இரண்டு அறிக்கைள் தயாரிக்கப்பட்டன. (ஒரு வலயத்திற்கு ஒன்று வீதம்) இரண்டு அறிக்கைகளும் இரு தேசிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும். அதன் பின்னர் பொது மக்கள் அறிந்துகொள்வதற்காக த.தொ.தொ.முகவர் நிலையத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் வசதிப்படுத்துனர்களால் கூட்டத்தொடரொன்று ஒழுங்குசெய்யப்பட்டு நடத்தப்படும்.
The main objectives of the village awareness meetings are:
கூட்டம் ஒழுங்குசெய்யப்படுகின்ற கிராமங்களில் வாழ்கின்றவர்களுக்கு அறிவகக் கருத்திட்டம் அவர்களுக்கு வழங்குகின்றவைகள் மற்றும் கருத்திட்டத்தின் எஞ்சியுள்ள பகுதியை எவ்வாறு செயற்படுத்துவது என்பதைப்பற்றிய மிகச் சிறந்த புரிந்துணர்வு கிடைக்கின்ற அதேவேளையில் தமது வாழ்க்கையை சிறப்பானதாக்கிக்கொள்வதற்கு த.தொட.தொ.அடிப்படையாகக்கொண்ட சேவைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக மேலும் அறிவைப் பெறுவார்கள்.
பணம் செலுத்தும் சான்றிதழின் பிரதான நோக்கம்:
கொடுப்பனவு சான்றிதழ் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக, அறிவகம் ஸ்தாபிக்கப்படுகின்ற பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள், தமது சமூகத்தின் அபிவிருத்திக்காகவும் தமது வாழ்க்கையை சிறப்பானதாக்கிக்கொள்வதற்கும் த.தொ.தொ. அடிப்படையாகக்கொண்ட சேவைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக அதிக அறிவையும் புரிந்துணர்வையும் படிப்படியாகப் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்டவாறு, அறிவகங்களை அமைக்கின்றபோது த.தொ.சார்ந்த உபகரணங்களை தயாரிப்பது அறிவக கருத்திட்டம் வழங்கும் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்.
இச்செயற்பாட்டின் பிரதான நோக்கம்:
திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் பிரகாரம் அனைத்து அறிவகங்களுக்கும் உரிய கால நேரத்தில் அறிவகங்களை ஸ்தாபிப்பதற்காக உரிய உபகரணங்கள் வழங்கப்படும்.
கிராமங்களுக்கு அறிவூட்டும் கூட்டங்களின் பின்னர் பூர்வாங்க விலைகூறல் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டு நடத்தப்படும். இக்கூட்டங்களில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்படும். ஆனால் அறிவகங்களின் உரிமையையும் செயற்பாட்டையும் கொண்டுள்ளவர்கள் பிரதான பங்கேற்பவர்களாக இருப்பார்கள்.
விலைகூறுபவர்களின் இந்த பூர்வாங்க கூட்டங்களின் பிரதான நோக்கம்:
திட்டமொன்றைத் தயாரிப்பதற்கான தேவையைத் தெரிவுசெய்யும் செயற்பாடும் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் வெற்றிகரமான விலைகூறியவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது என்ன என்பதை மிக நல்லமுறையில் புரிந்துகொள்வதற்கு தொழில் தருநர்களுக்கு விலைகூறல் கூட்டம் உதவியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வேறுபட்ட திட்ட முன்மொழிவாளர்களால் தயாரிக்கப்படுகின்ற சிறந்த திட்டத்தை தெரிவுசெய்தல் இச்செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும்.
இந்த செயற்பாட்டுக்காக குறித்தொதுக்கப்பட்டுள்ள காலவரையறைக்குள் மிகச் சிறந்த திட்ட முன்மொழிவொன்று தெரிவுசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சியின் நோக்கத்தில் பின்வரும் விடயங்கள் அடங்குகின்றன:
ஆற்றல் விருத்தியைக் கட்டியெழுப்பும் குழுவினால் வழங்கப்படுகின்ற வளங்களைப் பயன்படுத்தி வசதிப்படுத்துனர்கள் அறிவக செயற்பாட்டாளர்களுக்குப் பயிற்சியளிப்பார்கள்.
அறிவகத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் அதைச் சார்ந்த பல தலைப்புகளைப்பற்றி அறிவக செயற்பாட்டாளர்கள் மிகச் சிறந்த புரிந்துணர்வைப் பெற்றுக்கொள்வார்கள்.
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டின் பிரதான நோக்கத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன:
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு செயற்பாட்டின் விடய முன்னுரிமையைப் பேணுவதற்காக, த.தொ.தொ. முகவர் நிலையம் இச் செயற்பாட்டை சுயாதீன நிறுவனமொன்றைக் கொண்டு நடத்தும்.
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலகிலிருந்து கிடைக்கும் பின்னூட்டலின்மூலம் அறிவகங்களில் நீண்டகால தன்மையையும் அறிவக கருத்திட்டத்தின் நோக்கத்தையும் நிறைவேற்றிக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக உரிய நிதி மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.
அறிவக கருத்திட்டத்தின் முதலாவது கட்டத்திற்குரிய இறுதி நடவடிக்கையாக இதைக் காணக்கூடியதாக இருப்பினும், அறிவகம் அமைக்கப்படுகின்ற பிரதேசத்தின் மக்களின் அபிவிருத்தியின் பொறிமுறையாக அவற்றை ஆக்குவதற்கும் நீண்டகால நிலைபேறான தன்மையை நோக்கமாகக்கொண்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் முதற்கட்டம் இதுவாக இருக்கும்.